படம் 72

1.1  சித்ரா

மனிதம் விதைப்போம்

மனிதம் வளர்ப்போம்

கருப்பும் வெள்ளையும்

கண்கள் காண்பது

அன்பு என்பதே

உயிரால் உணர்வது

மனிதம் விதைப்போம்

மனிதம் வளர்ப்போம்

1.2  பிரபு பாலா

கனவு விதைக்கப்பட்டு

நம்பிக்கை நீராய்ச் சுரந்து

உறவுகளின் அர்ப்பணிப்பு வேரூன்றி

வாய்ப்புகள் கிளைகள் விரித்து

வளர்ந்த பெரும் நிறுவனம்!

1.3  தேன்மொழி

ஒற்றுமை விதையானால்

புது நம்பிக்கை அரும்பி 

உற்சாகக் கிளைகள் துளிர்த்து

வாழ்வின் இலட்சியங்கள்

பூத்துக் குலுங்கி

தோல்விக் காய்கள் காய்த்தாலும்

கனியும் வெற்றி  நிச்சயமாய்

மாபெரும் போராட்டங்களை உடைத்தெறிக்க

ஒற்றுமையே  விதை

ஒவ்வொரு நானும் உரமானால்

நாம் என்ற அடையாளம்

வேரூன்றி நிற்கும்

அசைக்க முடியாத

 வெற்றியின் சின்னமாய்!

Leave a comment