தங்க முத்திரை விருது, கணையாழி விருது, தங்கப் பதக்கம் விருது.

 கவிமாலையும், ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் இணைந்து படைக்கும்  கவிமாலையின் விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் 26-12-2010 ஞாயிறு மாலை சரியாக 6 மணிக்குத்துவங்கி இரவு 8மணிவரை ஜாலான் புசார் சமூக மன்ற இரண்டாம் தள விழா அரங்கில் நடைபெற உள்ளது..

1. ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறந்த கவிதை நூலுக்கான தங்கப் பதக்கம் விருது,

2. சிங்கப்பூர் மூத்தப் படைப்பாளிக்கு வழங்கப்படும் கணையாழி விருது,
3. சிறந்த கவிதைக்கான தங்க முத்திரை விருது

விழாவில் கவிதைத் தொகுப்பு வெளியீடும்,


கவிமாலையின்127-வது சந்திப்பின் கவிதைப் போட்டித் தலைப்பான”நெருடல்”என்ற தலைப்பில் போட்டிக்கவிதை அங்கமும் இடம்பெறும்..

 
 தமிழறிஞர்.சுப.திண்ணப்பன் அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் விருதுகளை வழங்கிச் சிறப்பிக்க இருப்பவர் 
 

 தமிழகத்தின்  புகழ்பெற்ற எழுத்தாளர் திரு.புஷ்பாதங்கதுரை அவர்கள்.

அனுமதி இலவசம்…நிகழ்ச்சி சரியாக 6 மணிக்குத்துவங்கும்

தமிழ் அமைப்புகளும்.தமிழ் ஆர்வலர்களும்,படைப்பாளிகளும்,இலக்கியவாதிகளும்
அந்த இனிய மாலையை நினைவில் கொண்டு பங்கேற்றுச் சிறக்க

அன்புடன் அழைப்பது-கவிமாலைக் கவிஞர்கள்…
தொடர்புக்கு  90053043,97187552,82453150 எண்களை  அழைக்கவும்

Advertisements

கணையாழி விருது – 2010

கவிமாலையும், ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் இணைந்து படைக்கும் கவிமாலையின்….

1)கணையாழி விருது

2)சிறந்த கவிதை நூலுக்கான தங்கப் பதக்கம் 

 3)சிறந்த கவிதைக்கான தங்க முத்திரை ஆகிய விருதுகள் வழங்கும் விழா இம்மாதம் இருபத்தாறாம் தேதி(26-12-2010) ஞாயிறு மாலை 6.30 மணிக்கு ஜாலான் புசார் சமூக மன்ற இரண்டாம் தள விழா அரங்கில் நடைபெறும்….

தமிழ் அமைப்புகளும், தமிழ் ஆர்வலர்களும், படைப்பாளிகளும், இலக்கியவாதிகளும் அந்த இனிய மாலையை நினைவில் கொண்டு பங்கேற்றுச் சிறக்க

அன்புடன் அழைப்பது-

கவிமாலைக் கவிஞர்கள்

மேலதிக தொடர்புக்கு 90053043,82453150 எண்களை அழைக்கவும்.

ஒரு முன்கூட்டிய அறிவிப்பு..

கவிஞர்.கி.கோவிந்தராசு அவர்களின் கவிதைப் புத்தகத் திறப்பு விழா 02-01-2011.

இடம் விட்டு இடம்

எதிவர்வரும் 26.12.2009 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஜலான்புசார் சமூகமன்றத்தில் நடைபெறும் மாதந்திரn கவிமாலைக் கவிஞர்களின் சந்திப்பில் அனைவரையும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

போட்டிக்கவிதை தலைப்பு: இடம் விட்டு இடம்

படித்த பிடித்த கவிதைகளை வாசிக்கும் அங்கத்துடன்

கவிஞர் ந.வீ.விசயபாரதி நடத்தும் யாப்பிலக்கண வகுப்பும் நடைபெறும்.

மேலதிக தொடர்பிற்கு

மா.அன்பழகன் 90053043

எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் கலந்துகொள்ளும் கவிமாலை

எதிர்வரும் சனிக்கிழமை  28.11.2009 அன்று மாலை 6.30 மணிக்கு ஜாலான் புசார் சமூக மன்றத்தில் (சிங்கப்பூர்)  நடைபெறும் மாதந்திர கவிமாலை நிகழ்ச்சியின் போட்டிக் கவிதைக்கான தலைப்பு ” தொலைந்த நாட்கள்”  தேர்வு செய்யப்படும் முதல் 6 கவிதைகளுக்கு  ரொக்கப் பரிசும் புத்தகப் பரிசும் வழங்கப்படும். நிகழ்வில் மரபுக்கவிதை எழுதுவது எப்படி என்று இலக்கண வகுப்பு நடத்தப்படும்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழகத்தில் இருந்து வந்திருக்கும் பின்நவீனத்துவ எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் அவர்கள் கலந்துகொள்கிறார்.

இவற்றுடன் படித்த பிடித்த கவிதைகளை வாசிக்கும் அங்கமும் இடம்பெறும்.

நிகழ்ச்சி நெறியாளர் : கவிஞர் பனசை நடராஜன்

அனுமதி  இலவசம் . அனைவரும் வருக.  புதிய நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

மேலதிக தொடர்புக்கு

மா.அன்பழகன்

90053043

ந.வீ.விசயபாரதி

82453150

31.10.2009 – போட்டிக்கவிதை தலைப்பு “கடற்கரை”

31.10.2009 அன்று மாலை 6.30 மணிக்கு ஜலான் புசார் சமூகமன்றத்தில் நடைபெறும் மாதாந்திர கடற்கரைச் சாலை கவிமாலை நிகழ்வின் போட்டிக்கவிதை தலைப்பு கடற்கரை . போட்டிக்கவிதையில் தேர்ந்தெடுக்கப்படும் 6 கவிதைகளுக்கு பரிசளிக்கப்படும்.

 

நிகழ்வில் 2009 சிறுகதைக்கான ”தங்கமுனை” விருதுபெற்ற எழுத்தாளர்கள் திருமதி.இன்பா,  திருமதி.மீரா மன்சூர்,  கவிதைக்கான ”தங்கமுனை” விருது பெற்ற கவிஞர்கள் திரு.கோ.இளங்கோ, திரு.நீதிப்பாண்டி ஆகியோர்  பாராட்டி கௌரவிக்கபடவிருக்கின்றனர். 

2009 முன்மாதிரி அன்னைக்கான அதிபர் விருது பெற்ற திருமதி.தவமணி அவர்களும் பாராட்டி கௌரவிக்கபடவிருக்கிறனர்.

 

வழக்கம் போல வடித்த, படித்த, பிடித்த கவிதைகள் வாசிப்பு அங்கமும் சிறப்புரையும் இடம்பெறும்.

 

அனைவரும் வருக அனுமதி இலவசம்..

 

அன்புடன் அழைப்பது

 

புதுமைத்தேனீ மா.அன்பழகன் மற்றும் கவிமாலைக்கவிஞர்கள்

 

 

மேலதிக தொடர்புக்கு: மா.அன்பழகன்

90053043

கவிதைத் திருவிழா

132712