படம் 83

1.1  கவிதா

வழுக்கை தனக்கு மட்டும்தான் தனியழகு என்ற இளநீரின் தலைக்கனம் இந்நேரம் தவிடுபொடியாகியிருக்கும்…..

@@@

ஒரு வழுக்கையே

வழுக்கை சாப்பிடப் போகிறதே என

 போகிற போக்கில் யாரும் கிண்டலடித்துப்

போனாரோ??

இப்படி முறைக்கிறான்

இச்சிறு குறும்பன்…

எனினும் அதுவுமே அழகுதான் அன்பனே.

@@

உன்னளவிற்கு இல்லையெனினும்

ஓரளவிற்கு வழுக்கைதான் என்ற

இளநீர் கோரிக்கையை

இளவலிவன் புறந்தள்ளி

அங்கே என்ன முறைக்கிறான்….

வழுமையாய் போட்டியிட

வரிசை கட்டி

வழுக்கைகள் வருகிறதா…??

@@@

1.2  கேந்திரபாலன் மூக்காண்டி

வழுக்கையொரு கவலையெனும்

வழக்கை மாற்றியெழுதுகின்றனர் – இந்த

இளநீரும் இளந்தளிரும்!

1.3  நா. துரைக்குமார்

செவ்விளநீரே

தகிக்கும் வெயிலில்

தாகம் தீர்க்கும்.

இளசுகள் நிறைந்த

கடற்கரைச் சாலையில்

கண்டதென்ன

கண்கவர்

காட்சியோ?

கருப்பு

கண்ணாடியில்

கண் சிமிட்டாமல் பார்க்கிறாய்!…

1.4  சாவித்திரி

அலைக்கு பயமில்லை.               

வெயிலுக்கும் குடையில்லை

வயித்துக்கு மண்டைச்சூடு தனிக்க.      

வழுக்கைத் தண்ணீரில்.                 

பதமாக குடித்து கண்ணை பதமாக குளுகுளு வசதியில்         சுகபோகியாக சித்தரிக்கும் சுகமே சுகம்

1.5  கனிமொழி முனிநாதன்

பொடி எழுத்துக்களில்

மறைக்கவெல்லாம்

தேவையில்லை

சுத்தம் படு சுத்தம்

உள்ளேயும் வெளியேயும்

நம்பி வாங்குங்க

நலமோடு போங்க.

@@

இவ்வழுக்கைகளில் நேற்றிலிருந்து

வழுக்கிக் கொண்டேயிருக்கிறோம்

எழ மனமின்றி….

@@

1.6  தவமணி கிருஷ்

இங்கே

புறத்தில் ஒரு வழுக்கை

அகத்தில் ஒரு வழுக்கை

இரண்டுமே  மகிழ்ச்சியானவை.

1.7  கருப்பசாமி பார்த்திபன்

இளவழுக்கை👨‍🦲👨‍🦲

இளநீர்

இதுவாகத்தான்

இருக்கும் என்று

நினைக்கிறேன் …!!

@@@

இரண்டுமே

இளவழுக்கை 🧑‍🦲🧑‍🦲

ஒன்று உள்ளே

மற்றொன்று வெளியே

@@@

இரண்டுமே

இளவழுக்கை தான்

அறிவியல் பூர்வமாக

ஆராய்ந்து

பார்த்தால்

ஒன்று            

குவி வழுக்கை

மற்றொன்று குழி வழுக்கை …!!

1.8  நாச்சியப்பன்

கொளுத்தும் வெயிலில்

கொழுத்த பையன்

வெளுத்த கலர் 

பழுத்த பழம்

பலத்த யோசனை

கனத்த உடம்பு

கரை சேர வழி தேடி

விழிக்கிறான் !

@@@

கடற்கரையில் இருக்கும் சிறுவனே

கரைசேர வழி தேடுகிறாயோ?

இள நீர் அருந்தினால் உன் தாகம் தணியும்

அமிர்தம் அருந்தினால் உன் வாழ்க்கையே மலரும்

தடையாய் இருக்கும் உன் கண்ணாடியை நீக்கு

அதிகாலைக் கதிரொளியை உன் கண்களால் நோக்கு

ஆதவனே உன்னை இயக்கம் சக்தி

இதையறிந்தால் நீ பெறுவாய் முக்தி!

1.9  லோகநாதன்

அலையும் அணைத்துக் கொஞ்ச

அலைகின்றது …

மணற்பரப்பு தன் கைகளால்

தொட்டு ரசிக்கின்றது…

இளநீரும் அள்ளிப் பருக

காத்திருக்கின்றது… 

சுடும் வெய்யிலும்

குளிர்கின்றது…

புதுக்கவிஞன் இவன் பார்வையில்

பாரெல்லாம் புத்துயிர் பெறுகின்றதோ…!!!

1.10 கார்த்திக் சிதம்பரம்

கண்ணுக்கு எட்டியவரை

கவலையை காணோம்

தனிமையில் இருந்தாலும்

தன்னருகிலேயே நிற்கிறது இன்பம்

கண்ணாடி போட்டு தேடிப்பார்த்தாலும்

காணவில்லை கவலை

கடலே சுற்றி இருந்தாலும்

தாகத்திற்கு கடல் நீரா குடிக்க இயலும் ?

இதமான இளநீர்தானே வேண்டும் ?

உலகே  உழன்று நின்றாலும்

உறைந்தா போவது  ?

உற்சாகம்தானே  வேண்டும் ?

கவலையை மற

இளநீரை திற !

1.11 பிரபு பாலா

முகத்தை மூடிக்கொண்டு

திரியும் மனிதர்களைக் கண்டு,

தர்மத்தை நிலை நாட்டக்

கலியுகக் கண்ணன்

குளிர் கண்ணாடி அணிந்து கலமிறங்கிவிட்டானோ!

அன்று! மதுராவில், ஊதும் குழலேந்தி

வெண்ணெய் உண்ட வாயோடு

ஆயர்குலப் பெண்களிடம்

சிக்கிக்கொள்வான்.

இன்று! மயாமியில் உறிஞ்சும் குழலேந்தி

தென்னை இளநீர் பருகும்போது

ஆண்ட்ராய்டு கைப்பேசியிடம்

சிக்கிவிட்டானே!

Leave a comment