படம் 67

1.1  ப்ரியா ஷியாம்

புல்லை உணவாக்கி பசும்

பாலை அன்னை சுரக்க

நீங்கள் எடுத்துக்கொண்டீர் 

உங்கள் ஆரோக்கியத்திற்கு

நான் மாறினேன்ஆரோக்கியாவிற்கு

————————-

வைக்கோல் அடைத்த கன்றைக் காட்டி

சுரக்க வேண்டியதை,  கறந்து விற்கிறீர்கள்

என்ன விலை? என் அம்மாவின் பால்.

1.2  பிரபு பாலா

காம்புகள் சுரப்பதற்காக

என்னை ஏமாற்றிக் கரந்து

நான் மெலிந்ததை நினைத்து

ஒருபோதும் வருந்தவில்லை!

ஆனால்! நீயே! தண்ணீர்

ஊற்றிக் கலந்த பாலைப்

பசும் பால் எனச்சொல்லி

விற்று என் தாயின் புனிதத்தைக்

கெடுப்பதைக் கண்டால்

கலங்கிப் போய் விடுகின்றேன்!

1.3  தேன்மொழி

தன் தாயின் வசம் திருடிய பாலை

தாயின் வாசம் நுகர்ந்து கண்டறிந்ததோ

இந்தத் துப்பறியும் சேய்!

1.4  கனிமொழி

என் வயிற்றை

காயவைத்து உன்

வயிற்றை நிரப்பி

 கொள்ளுவதுதான்

உன் நியாயமோ

பேச தெரிந்த

உனக்கு பேசா

என் பசி புரியாமல்

போனது உன்

மறதியோ…

உன் பிள்ளைக்கும்

சேர்த்தே கொடுத்த

என் தாயை பிரித்ததுதான் நீ

கண்ட தர்மமோ.

Leave a comment