கவிமாலையும், ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் இணைந்து படைக்கும் கவிமாலையின் விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் 26-12-2010 ஞாயிறு மாலை சரியாக 6 மணிக்குத்துவங்கி இரவு 8மணிவரை ஜாலான் புசார் சமூக மன்ற இரண்டாம் தள விழா அரங்கில் நடைபெற உள்ளது..
1. ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறந்த கவிதை நூலுக்கான தங்கப் பதக்கம் விருது,
2. சிங்கப்பூர் மூத்தப் படைப்பாளிக்கு வழங்கப்படும் கணையாழி விருது,
3. சிறந்த கவிதைக்கான தங்க முத்திரை விருது
விழாவில் கவிதைத் தொகுப்பு வெளியீடும்,
கவிமாலையின்127-வது சந்திப்பின் கவிதைப் போட்டித் தலைப்பான”நெருடல்”என்ற தலைப்பில் போட்டிக்கவிதை அங்கமும் இடம்பெறும்..
தமிழறிஞர்.சுப.திண்ணப்பன் அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் விருதுகளை வழங்கிச் சிறப்பிக்க இருப்பவர்
தமிழகத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் திரு.புஷ்பாதங்கதுரை அவர்கள்.
அனுமதி இலவசம்…நிகழ்ச்சி சரியாக 6 மணிக்குத்துவங்கும்
தமிழ் அமைப்புகளும்.தமிழ் ஆர்வலர்களும்,படைப்பாளிகளும்,இலக்கியவாதிகளும்
அந்த இனிய மாலையை நினைவில் கொண்டு பங்கேற்றுச் சிறக்க
அன்புடன் அழைப்பது-கவிமாலைக் கவிஞர்கள்…
தொடர்புக்கு 90053043,97187552,82453150 எண்களை அழைக்கவும்
Filed under: அழைப்பிதழ்,கணையாழி,கவிதை,நிகழ்வு,பத்திரிக்கைச் செய்தி,போட்டிக் கவிதை | Leave a Comment »



