
1.1 கவிதா
சிட்டுக் குருவியே
நீ சிறகு விரிக்கும் வீரியத்தில்…
உன் சுதந்திர வேட்கையுடன்
அந்தக் கை கொண்ட கருனணயும்
கச்சிதமாய்ப் புரிகிறது…
@@
சிட்டுக்குருவிக்கும் சுதந்திரம் என்பது பிறப்புரிமையே….
இருப்பினும்,
ஒற்றைக்காற் கொலுசணிந்த பெண்குருவியே….
கன்னிகளுடன் வேடர்கள்
காத்திருக்கும் காலமிது…
கவனமாய் உன் வானத்தை வசப்படுத்து….
1.2 கருப்புச்சாமி பார்த்திபன்
நீயும் ஒரு நவீன பெண்
சிட்டுக்குருவி தான் ..!
உன் ஒற்றைக் காலில்
அணிந்திருக்கும்
வெள்ளி கொலுசை
பார்க்கும் பொழுது..!!
@@
வீட்டினுள் நுழைய
தெரிந்த எனக்கு
வெளியேற வழி
தெரியவில்லை.!
உன் கைகளில் தஞ்சம்
அடைந்த எனக்கு
ஐந்து அறிவு தான் என்பதை
ஒத்துக்கொள்கிறேன்
மானிடா..!!
ஜன்னல் கதவை திற
உனக்கு காற்று வரும்
எனக்கோ உயிர் வரும்…!!!
@@
1.3 நா.துரைக்குமார்
சிறகு முளைத்த
பிறகு சிட்டு
கையை விட்டுப் போனது
உன்னோடு பறக்க
ஆசைப்பட்ட நான்
மட்டும் இன்னும் சிறையினில்…
@@@
இட்ட முட்டை எனதென்று
தெரியாமல் பெட்டை நான்
அடை காக்க தங்க முட்டையோ?
நின் தாய் தள்ளிவிட்டாள்.
இரை போட்டு வளர்த்தேன்
சிறையல்ல செல்லக் குயிலே!
இனம் கண்டு சினம் கொள்வேனோ?!
இறகு முளைத்து விட்டதென
பறந்து செல்வது நியாயமா
பாடு குயிலே பாடு உன்
இனிமையான குரல் கேட்க
எத்தனை நாட்கள் காத்திருப்பேன்…
1.4 நாச்சியப்பன்
உள்ளேயும் வெளியேயும்
அன்று சுதந்திரமாய்த் திரிந்து
உன்னை சிறைப் படுத்தினேன்
இன்று என்
தனிமையின் வலி
தர்மத்தின் வழி
உனக்கு சுதந்திரம்
அளிக்கிறது.
1.5 முத்துமாரி
சிறகடிக்கும் சிட்டுக்குருவி!
மனதிலோ
பொங்கும்
அருவி!
உன் கணவனை
கொன்ற பாவியை தேடுகிறாயோ!?
ஒற்றைச் சிலம்ப பணிந்த
கண்ணகி நீ தானோ!!
@@
உன் இனம் அழிந்தால்
மனித இனமும் அழியுமே!
என்றுணர்ந்தவனே
உனை சிறகடிக்க விட்டானோ!!
@@
1.6 தவமணிகிருஷ்
பறக்கும் வரை வளர்த்து
பறக்க வைக்கும் மனிதனை வணங்கி மகிழ்கிறேன்.
1.7 தேன்மொழி
சுளகில் புடைத்து
பார்த்துப்பார்த்து
பரிமாறிய அடிமை அரிசி
செரிக்காமல்
சிக்கிக்கொண்ட பறவை
இன்று பறக்கிறது
சுதந்திர இரையைத்
தேடி ருசிக்க!
1.8 லோகநாதன்
என் வீட்டை அலங்கரிக்கவே
உன் கூட்டை பிரியவைத்தேன்-இன்று
பூட்டிய வீட்டில் நான்
முடங்கி மாய்கிறேன்-இனியாவது
திறந்த வெளியில் நீ
சுற்றி வாழ்!