எதிர்வரும் சனிக்கிழமை 28.11.2009 அன்று மாலை 6.30 மணிக்கு ஜாலான் புசார் சமூக மன்றத்தில் (சிங்கப்பூர்) நடைபெறும் மாதந்திர கவிமாலை நிகழ்ச்சியின் போட்டிக் கவிதைக்கான தலைப்பு ” தொலைந்த நாட்கள்” தேர்வு செய்யப்படும் முதல் 6 கவிதைகளுக்கு ரொக்கப் பரிசும் புத்தகப் பரிசும் வழங்கப்படும். நிகழ்வில் மரபுக்கவிதை எழுதுவது எப்படி என்று இலக்கண வகுப்பு நடத்தப்படும்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழகத்தில் இருந்து வந்திருக்கும் பின்நவீனத்துவ எழுத்தாளர் எம்.ஜி.சுரேஷ் அவர்கள் கலந்துகொள்கிறார்.
இவற்றுடன் படித்த பிடித்த கவிதைகளை வாசிக்கும் அங்கமும் இடம்பெறும்.
நிகழ்ச்சி நெறியாளர் : கவிஞர் பனசை நடராஜன்
அனுமதி இலவசம் . அனைவரும் வருக. புதிய நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.
மேலதிக தொடர்புக்கு
மா.அன்பழகன்
90053043
ந.வீ.விசயபாரதி
82453150
Filed under: அழைப்பிதழ்,கவிதை,நிகழ்வு,போட்டிக் கவிதை குறிச்சொற்கள்: | எம்.ஜி.சுரேஷ்