மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் அறிவிப்பு!
முதுகலைப் பட்டம் படித்த சிங்கப்பூர் தமிழர்கள் முனைவர் பட்டம் பெறுவது இப்போது எளிமைப் படுத்தப்பட்டிருப்பதாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் தி.சபாபதி மோகன் அறிவித்தார்.
சிங்கப்பூர் கவிஞர்கள் தொடர்ச்சியாக நடத்திவரும் கவிமாலை அமைப்பின் நூறாவது கவிமாலை மற்றும் ஆறாவது கணையாழி விருது வழங்கும் விழாவில் பேசியபோது இத்தகவலை அவர் அறிவித்தார்
கடந்த ஞாயிறன்று சிராங்கூன் சாலை வள்ளல் கோவிந்தசாமிப்பிள்ளை திருமண மன்றத்தில் பல நூற்றக் கணக்கானோர் கலந்துகொண்ட அவ்விழாவில் மூத்த தமிழாசிரியர் கவிஞர் மு.தங்கராசனுக்கு கணையாழி விருது வழங்கியும் 100-வது கவிமாலையைத் தொடங்கிவைத்தும் திரு.சபாபதிமோகன் பேசினார்.
எந்தத் துறையில் முதுகலைப்பட்டம் முடித்தவர்களும் நேரடியாக முனைவர் பட்டம்பெற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் விண்ணப்பிக்கலாம் என்னும் அண்மையில் நடப்புக்கு வந்திருக்கும் இத்திட்டத்தை சிங்கப்பூர்த் தமிழறிஞர்கள் ஆசிரியர்கள் படைப்பாளர்கள் ஆகியோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார் சிங்கப்பூரில் உள்ளோர் இதுதொடர்பான மேல் விபரங்களை தேசியபல்கலைக் கழகத் தமிழறிஞர் முனைவர் சுப.திண்ணப்பன் அவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.
விழாவில் வெளியீடு கண்ட சிங்கப்பூர் தேசியதினக்கவிதைத் தொகுப்பான “கூடி வாழ்த்தும் குயில்கள்” என்ற கவிதைப் புத்தகத்தை தம் நிர்வாகத்திலுள்ள பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் பாடத்திட்டத்தில் சேர்க்கத் தான் பரிந்துரை செய்வதாகவும் பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.
ஆசியான் கவிஞர் க.து.மு.இக்பால் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முன்னதாக பாண்டிச்சேரியை சேர்ந்த பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ அவர்களின் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவுரையும் கவிமாலைக் கவிஞர்கள் கலந்து கொண்டு கவிதைப் போட்டியும் நடைபெற்றன. கவிதைப்போட்டியில் வெற்றிபெற்ற கவிஞர்கள் மலர்விழி இளங்கோவன், கருணாகரசு, பா.திருமுருகன், பெரி. சிவக்குமார், காதலுடன் கண்ணா ஆகியோருக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியன் தொடக்கத்தில் கவிஞர் பிச்சினிகாடு இளங்கோ வரவேற்புரையாற்ற கணையாழி விருது பெற்ற தமிழறிஞரை அறிமுகப்படுத்தி மா.அன்பழகன் பேசினார். “கூடி வாழ்த்தும் குயில்கள்” நூலினை வெளியிட்டு இலக்கிய ஆய்வுரையை திரு.சுப.திண்ணப்பன் மேற்கொண்டார். நிகழ்ச்சியை வழிநடத்திய ந.வீ.விசயபாரதியின் நன்றியுரையுடன் சரியாக ஒன்பது மணிக்கு நிகழ்ச்சி நிறைவடைந்தது.
செய்தி: ந.வீ.சத்தியமூர்த்தி
Filed under: கட்டுரை
sir im just sslc and iti electrician, but i,m willing to get phd in srilankan tamilians and their rights in srilanka , so what can i do next, i think my educational is one of the barrier to get my phd. so plxz send full details to my mail id : loveeraajj@gmail.com